விண்ணவர் புகழும் மெய்கண்ட நாதன் வித்தகக் கபிலன்ஆ தியர்க்கே கண்அருள் செயும்நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன் தண்அருட் கடலே அருட்சிவ போக சாரமே சராசர நிறைவே வண்ணமா மேனிப் பரசிவ களிறே வல்லபைக் கணேசமா மணியே