விண்ணார் பொழில்சூ ழொற்றியுளீர் விளங்குந் தாம மிகுவாசத் தண்ணார் மலர்வே தனையொழிக்கத் தருதல் வேண்டு மெனக்கென்றேன் பண்ணார் மொழியா யுபகாரம் பண்ணாப் பகைவ ரேனுமிதை யெண்ணா ரெண்ணா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ
விண்ணார் செஞ்சுட ரே - சுடர் - மேவிய உள்ளொளி யே தண்ணார் வெண்மதி யே - அதில் - தங்கிய தண்ணமு தே கண்ணார் மெய்க்கன லே - சிவ - காமப்பெண் காதல னே அண்ணா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே