விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ விரியஅதின் மற்றொருபூ விரிந்திடஇவ் வைம்பூக் கண்ணிடத்தே பிறிதொருபூ கண்மலர அதிலே கட்டவிழ வேறொருபூ விட்டஎழு பூவும் பெண்ணிடத்தே நான்காகி ஆணிடத்தே மூன்றாய்ப் பிரிவிலவாய்ப் பிரிவுளவாய்ப் பிறங்கியுடல் கரணம் நண்ணிடத்தேர்ந் தியற்றிஅதின் நடுநின்று விளங்கும் நல்லதிரு வடிப்பெருமை சொல்லுவதார் தோழி