விண்ணுடை யாய்வெள்ளி வெற்புடை யாய்மதி மேவுசடைக் கண்ணுடை யாய்நெற்றிக் கண்ணுடை யாய்அருட் கண்ணுடையாய் பண்ணுடை யாய்திசைப் பட்டுடை யாய்இடப் பாலில்அருட் பெண்ணுடை யாய்வந்திப் பிட்டுடை யாய்என் பெருஞ்செல்வமே