விண்ணெலாம் கலந்த வெளியில்ஆ னந்தம் விளைந்தது விளைந்தது மனனே கண்ணெலாம் களிக்கக் காணலாம் பொதுவில் கடவுளே என்றுநம் கருத்தில் எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி ஏத்தலாம் எடுத்தெடுத் துவந்தே உண்ணலாம் விழைந்தார்க் குதவலாம் உலகில் ஓங்கலாம் ஓங்கலாம் இனியே