விண்ணேவிண் உருவேவிண் முதலே விண்ணுள் வெளியேஅவ் வெளிவிளங்கு வெளியே என்றன் கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட் கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே தண்ணேதண் மதியேஅம் மதியில் பூத்த தண்ணமுதே தண்ணமுத சார மேசொல் பண்ணேபண் ணிசையேபண் மயமே பண்ணின் பயனேமெய்த் தவர்வாழ்த்திப் பரவும் தேவே