விண்பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடந்தரினும் உண்பார் இன்னும் உனக்கதுதான் உடன்பா டாமோ உளமுருகித் தண்பார் என்பார் தமையெல்லாம் சார்வார் அதுஉன் சம்மதமோ எண்பார் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே