விதிஎ லாம்விலக் கெனவிலக் கிடுவேன் விலக்கெ லாங்கொண்டு விதிஎன விதிப்பேன் நிதிஎ லாம்பெற நினைத்தெழு கின்றேன் நிலமெ லாங்கொளும் நினைப்புறு கின்றேன் எதிஎ லாம்வெறுத் திட்டசிற் றூழை இன்பெ லாங்கொள எண்ணிநின் றயர்வேன் பதிஎ லாங்கடந் தெவ்வணம் உய்வேன் பரம ராசியப் பரம்பரப் பொருளே