விதிக்கும் பதிக்கும் பதிநதி ஆர்மதி வேணிப்பதி திதிக்கும் பதிக்கும் பதிமேற் கதிக்குந் திகழ்பதிவான் துதிக்கும் பதிக்கும் பதிஓங்கு மாபதி சொற்கடந்த பதிக்கும் பதிசிற் பதியெம் பதிநம் பசுபதியே