விதியாகி அரியாகிக் கிரீச னாகி விளங்குமகேச் சுரனாகி விமல மான நிதியாகுஞ் சதாசிவனாய் விந்து வாகி நிகழ்நாத மாய்ப்பரையாய் நிமலா னந்தப் பதியாகும் பரசிவமாய்ப் பரமாய் மேலாய்ப் பக்கமிரண் டாயிரண்டும் பகரா தாகிக் கதியாகி அளவிறந்த கதிக ளெல்லாம் கடந்துநின்று நிறைந்தபெருங் கருணைத் தேவே