விதியும் மாலுமுன் வேறுரு வெடுத்து மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர் நதியும் கொன்றையும் நாகமும் பிறையும் நண்ணி ஓங்கிய புண்ணியச் சடையார் பதியு நாமங்கள் அனந்தமுற் றுடையார் பணைகொன் ஒற்றியூர்ப் பரமர்கா ணவர்தாம் வதியும் கோயிற்குத் திருவிளக் கிடுவோம் வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே