விதிவிலக்கீ தென்றறியும் விளைவொன் றில்லா வினையினேன் எனினும்என்னை விரும்பி என்னுள் மதிவிளக்கை ஏற்றிஅருள் மனையின் ஞான வாழ்வடையச் செயல்வேண்டும் வள்ள லேநற் பதிமலர்த்தாள் நிழலடைந்த தவத்தோர்க் கெல்லாம் பதியேசொல் லரசெனும்பேர் படைத்த தேவே கதிதருகற் பகமேமுக் கனியே ஞானக் கடலேஎன் கருத்தேஎன் கண்ணு ளானே