விதுவாழ் சடையார் விடைமேல் வருவார் விதிமால் அறியா விமலனார் மதுவாழ் குழலாள் புடைவாழ் உடையார் மகனார் குகனார் மயில்ஊர்வார் முதுவாழ் வடையா தவமே அலைவேன் முன்வந்த திடயான் அறியாதே புதுவாழ் வுடையார் எனவே மதிபோய் நின்றேன் அந்தோ பொல்லேனே