வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப விரிகடல் ஆழ்ந்தனன் அந்தோ அத்தக வேனை எடுப்பவர் நின்னை அன்றிஎங் கணும்இலை ஐயா மத்தகக் கரியின் உரிபுனை பவள வண்ணனே விண்ணவர் அரசே புத்தக நிறைவின் அடியவர் வேண்டும் பொருள்எலாம் புரிந்தருள் பவனே