வித்தெலாம் அளித்த விமலனை எல்லா விளைவையும் விளைக்கவல் லவனை அத்தெலாங்() காட்டும் அரும்பெறல் மணியை ஆனந்தக் கூத்தனை அரசைச் சத்தெலாம் ஆன சயம்புவை ஞான சபைத்தனித் தலைவனைத் தவனைச் சித்தெலாம் வல்ல சித்தனை ஒன்றாந் தெய்வத்தைக் கண்டுகொண் டேனே () அத்து - செந்நிறம் முதற்பதிப்பு