விந்துநிலை நாதநிலை இருநிலைக்கும் அரசாய் விளங்கியநின் சேவடிகள் மிகவருந்த நடந்து வந்துநிலை பெறச்சிறியேன் இருக்குமிடத் தடைந்து மணிக்கதவந் திறப்பித்து மகனேஎன் றழைத்து இந்துநிலை முடிமுதலாந் திருஉருவங் காட்டி என்கையில்ஒன் றளித்தின்பம் எய்துகஎன் றுரைத்தாய் முந்துநிலைச் சிறியேன்செய் தவமறியேன் பொதுவில் முத்தர்மனந் தித்திக்க நிருத்தமிடும் பொருளே