வினைத்தடைதீர்த் தெனைஆண்ட மெய்யன்மணிப் பொதுவில் மெய்ஞ்ஞான நடம்புரிந்து விளங்குகின்ற விமலன் எனைத்தனிவைத் தருளொளிஈந் தென்னுள்இருக் கின்றான் எல்லாஞ்செய் வல்லசித்தன் இச்சையருட் சோதி தினைத்தனைபெற் றவரேனும் சாலுமுன்னே உலகில் செத்தவர்கள் எல்லாரும் திரும்பவரு கென்று நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர்கண்டாய் எனது நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே குறட்டாழிசை