வினைமாலை நீத்தவரே அணையவா ரீர் வேதமுடிப் பொருளவரே அணையவா ரீர் அனைமாலைக் காத்தவரே அணையவா ரீர் அருட்பெருஞ்சோ திப்பதியீர் அணையவா ரீர் புனைமாலை வேய்ந்தவரே அணையவா ரீர் பொதுவில்நிறை பூரணரே அணையவா ரீர் எனைமாலை யிட்டவரே அணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர் அணையவா ரீர்