வினையி னால்உடல் எடுத்தன னேனும் மேலை நாள்உமை விரும்பிய அடியேன் எனைஇன் னான்என அறிந்திலி ரோநீர் எழுமைச் செய்கையும் இற்றென அறிவீர் மனையி னால்வரும் துயர்கெட உமது மரபு வேண்டியே வந்துநிற் கின்றேன் புனையி னால்அமர்ந் தீர்ஒற்றி உடையீர் பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ