விமலை இடத்தார் இன்பதுன்பம் வேண்டா நலத்தார் ஆனாலும் அமலம் உடையார் தீவண்ணர் ஆமென் றுரைப்பார் ஆனாலும் நமலம் அறுப்பார் பித்தர்எனும் நாமம் உடையார் ஆனாலும் கமலை அனையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே