விரதம் அழிக்கும் கொடியார்தம் விழியால் மெலியா துனைப்புகழும் சரதர் அவையில் சென்றுநின்சீர் தனையே வழுத்தும் தகைஅடைவான் பரதம் மயில்மேல் செயும்தணிகைப் பரனே வெள்ளிப் பருப்பதம்வாழ் வரதன் மகனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே