விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம் விதித்தானை மெய்ந்நெறியை மெய்யே எற்குத்() தெரித்தானை நடம்பொதுவில் செய்கின் றானைச் சிறியேனுக் கருள்ஒளியால் சிறந்த பட்டம் தரித்தானைத் தானேநா னாகி என்றும் தழைத்தானை எனைத்தடுத்த தடைகள் எல்லாம் எரித்தானை என்உயிருக் கின்பா னானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே () விரைத்தானை மெய்யே என்னை - பி இராபதிப்பு