விருப்பாகும் மதிச்சடையாய் விடையாய் என்றே மெய்யன்போ டுனைத்துதியேன் விரைந்து வஞ்சக் கருப்பாயும் விலங்கெனவே வளர்ந்தே நாளைக் கழிக்கின்றேன் கருநெஞ்சக் கள்வ னேனைப் பொருப்பாய யானையின் கால் இடினும் பொல்லாப் புழுத்தலையில் சோரிபுறம் பொழிய நீண்ட இருப்பாணி ஏற்றுகினும் அன்றி இன்னும் என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்