விருப்பி லேன்திரு மால்அயன் பதவி வேண்டிக் கொள்கென விளம்பினும் கொள்ளேன் மருப்பின் மாஉரி யாய்உன்தன் அடியார் மதிக்கும் வாழ்வையே மனங்கொடு நின்றேன் ஒருப்ப டாதஇவ் வென்னள வினிஉன் உள்ளம் எப்படி அப்படி அறியேன் திருப்பு யாசல மன்னர்மா தவத்தோர் திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே