விருப்பிலேன் போலக் காட்டினேன் அன்றி விளைவிலா தூண்எலாம் மறுத்த கருப்பிலே எனினும் கஞ்சியா திகளைக் கருத்துவந் துண்ணுதற் கமையேன் நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் நீரிடாத் தயிரிலே நெகிழ்ந்த பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை பற்றினேன் என்செய்வேன் எந்தாய்