விருப்பு நின்றதும் பதமலர் மிசைஅவ் விருப்பை மாற்றுதல் விரகுமற் றன்றால் கருப்பு நேரினும் வள்ளியோர் கொடுக்கும் கடமை நீங்குறார் உடமையின் றேனும் நெருப்பு நும்உரு ஆயினும் அருகில் நிற்க அஞ்சுறேன் நீலனும் அன்றால் பொருப்பு வில்லுடை யீர்ஒற்றி உடையீர் பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ