விரும்பித் திருமால் விலங்காய் நெடுநாள் அரும்பித் தளைந்துள் அயர்ந்தே - திரும்பிவிழி நீர்கொண்டும் காணாத நித்தன்ஒற்றி யூரன்அடிச் சீர்கொண்டு நெஞ்சே திகழ்