விரைந்து விரைந்து படிகடந்தேன் மேற்பால் அமுதம் வியந்துண்டேன் கரைந்து கரைந்து மனம்உருகக் கண்ணீர் பெருகக் கருத்தலர்ந்தே வரைந்து ஞான மணம்பொங்க மணிமன் றரசைக் கண்டுகொண்டேன் திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும் செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே