விரைந்துகேள் மகனே உலகெலாம் களிக்க மெய்யருள் திருவினை நினக்கே வரைந்துநன் மணஞ்செய் தொருபெரு நிலையில் வைத்துவாழ் விக்கின்றோம் அதனால் இரைந்துளம் கவலேல் இரண்டரைக் கடிகை எல்லையுள் எழில்மணக் கோலம் நிரைந்துறப் புனைதி என்றுவாய் மலர்ந்தார் நிருத்தஞ்செய் ஒருத்தர்உள் உவந்தே