விரைந்துநின் அருளை ஈந்திடல் வேண்டும் விளம்பும்இத் தருணம்என் உளந்தான் கரைந்தது காதல் பெருகிமேல் பொங்கிக் கரைஎலாம் கடந்தது கண்டாய் வரைந்தெனை மணந்த வள்ளலே எல்லாம் வல்லவா அம்பல வாணா திரைந்தஎன் உடம்பைத் திருஉடம் பாக்கித் திகழ்வித்த சித்தனே சிவனே