விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர் திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும் செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர் கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக் கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே