விரைவாய் கடப்பந் தார்அணிந்து விளங்கும் புயனே வேலோனே தரைவாய் தவத்தால் தணிகைஅமர் தருமக் கடலே தனிஅடியேன் திரைவாய் சனனக் கடற்படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞானக் கரைவாய் ஏறி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே