விற்கண் டாத நுதன்மடவாள் வேட்ட நடன வித்தகனார் சொற்கண் டாத புகழொற்றித் தூய ரின்றென் மனைபுகுந்தார் நிற்கண் டார்கண் மயலடைவா ரென்றார் நீர்தா நிகழ்த்தியசொற் கற்கண் டாமென் றுரைத்தேனான் கற்கண் டாமென் றுரைத்தாரே