வில்லார் நுதலாய் மகளேநீ மேலை நாட்செய் தவம்எதுவோ கல்லார் உள்ளம் கலவாதார் காமன் எரியக் கண்விழித்தார் வில்லார் விசையற் கருள்புரிந்தார் விளங்கும் ஒற்றி மேவிநின்றார் கொல்லா நெறியார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே