வில்லை மலையாய்க் கைக்கொண்டார் விடஞ்சூழ் கண்டர் விரிபொழில்சூழ் தில்லை நகரார் ஒற்றியுளார் சேர்ந்தார் அல்லர் நான்அவர்பால் ஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும் இல்லை எனிலோ என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ