விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன் அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம் அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன் கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன் கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன் களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே