விளக்குறழ் அணிப்பூண் மேல்அணிந் தோங்கி விம்முறும் இளமுலை மடவார் களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டுன் கழல்அடிக் காக்கும்நாள் உளதோ அளக்கருங் கருணை வாரியே ஞான அமுதமே ஆனந்தப் பெருக்கே கிளக்கரும் பூகழ்கொள் தணிகையம் பொருப்பில் கிளர்ந்தருள் பூரியூம்என் கிளையே