விளங்கியஐங் கருச்சத்தி ஓர்அனந்தங் கருவில் விளைகின்ற சத்திகள்ஓர் அனந்தம்விளை வெல்லாம் வளம்பெறவே தருகின்ற சத்திகள்ஓர் அனந்தம் மாண்படையத் தருவிக்கும் சத்திகள்ஓர் அனந்தம் உளங்கொளநின் றதிட்டிக்கும் சத்திகள்ஓர் அனந்தம் ஓங்கியஇச் சத்திகளைத் தனித்தனியே இயக்கித் தளங்கொளஈண் டவ்வவற்றிற் குட்புறம்நின் றொளிரும் சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி