விளங்குமணி விளக்கெனநால் வேதத் துச்சி மேவியமெய்ப் பொருளை உள்ளே விரும்பி வைத்துக் களங்கறுமெய் யன்பரெல்லாங் களிப்ப அன்றோர் கற்றுணையாற் கடல்கடந்து கரையிற் போந்து துளங்குபெருஞ் சிவநெறியைச் சார்ந்த ஞானத் துணையேநந் துரையேநற் சுகமே என்றும் வளங்கெழும்ஆ கமநெறியை வளர்க்க வந்த வள்ளலே நின்னருளை வழங்கு வாயே