விளைத்தனன் பவநோய்க் கேதுவாம் விடய விருப்பினை நெருப்புறழ் துன்பின் இளைத்தனன் அந்தோ ஏழைமை அதனால் என்செய்கேன் என்பிழை பொறுத்துத் தளைத்தவன் துயர்நீத் தாளவல் லவர்நின் தனைஅன்றி அறிந்திலன் தமியேன் கிளைத்தவான் கங்கை நதிச்சடை யவனே கிளர்தரும் சிற்பர சிவனே