விழற்கிறைத்து மெலிகின்ற வீண னேன்இவ் வியன்உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம் அழற்கிறைத்த பஞ்செனவே ஆக்கி நீயே ஆட்கொண்டால் தடுப்பவரிங் காரே ஐயா கழற்கடிமை எனஉலகம் அறிய ஒன்றும் கருதறியாச் சிறுபருவத்தென்னை ஆண்டு நிழற்கருணை அளித்தாயே இந்நாள் நீகை நெகிழவிட்டால் என்செய்வேன் நிலையி லேனே