விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல் விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும் முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில் சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே