விழுக்குலத்தார் அருவருக்கும் புழுக்குலத்தில் கடையேன் மெய்யுரையேன் பொய்யுரையை வியந்துமகிழ்ந் தருளி முழுக்குலத்தோர் முடிசூட்டி ஐந்தொழில்செய் எனவே மொழிந்தருளி எனையாண்ட முதற்றனிப்பேர் ஒளியே எழுக்குலத்தில் புரிந்தமனக் கழுக்குலத்தார் தமக்கே எட்டாத நிலையேநான் எட்டியபொன் மலையே மழுக்குலத்தார் போற்றமணி மன்றில்நடம் புரியும் மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே