விழுத்தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் மிகஇனிக் கின்றநின் புகழ்கள் வழுத்தலை அறியேன் மக்களே மனையே வாழ்க்கையே துணைஎன மதித்துக் கொழுத்தலை மனத்துப் புழுத்தலைப் புலையேன் கொக்கனேன் செக்கினைப் பலகால் இழுத்தலை எருதேன் உழத்தலே உடையேன் என்னினும் காத்தருள் எனையே