வீணே பொழுது கழிக்கின்ற நான்உன் விரைமலர்த்தாள் காணேன்கண் டாரையுங் காண்கின்றி லேன்சற்றும் காணற்கன்பும் பூணேன் தவமும் புரியேன் அறமும் புகல்கின்றிலேன் நாணேன் விலங்கிழி யாணே யெனுங்கடை நாயினனே
வீணே பராக்கில் விடாதீர் உமதுளத்தை நாணே உடைய நமரங்காள் - ஊணாகத் தெள்ளமுதம் இன்றெனக்குச் சேர்த்தளித்தான் சித்தாட உள்ளியநாள் ஈதறிமின் உற்று