வீர மாந்தரும் முனிவரும் சுரரும் மேவு தற்கொணா வெள்ளியங் கிரியைச் சேர நாம்சென்று வணங்கும்வா றெதுவோ செப்பென் றேஎனை நச்சிய நெஞ்சே ஊர னாருடன் சேரனார் துரங்கம் ஊர்ந்து சென்றஅவ் உளவறிந் திலையோ நார மார்மதிச் சடையவன் நாமம் நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே