வீற்றா ரொற்றி யூரமர்ந்தீர் விளங்கு மதனன் மென்மலரே மாற்றா ரென்றே னிலைகாணெம் மாலை முடிமேற் காணென்றார் சாற்றாச் சலமே யீதென்றேன் சடையின் முடிமே லன்றென்றார் ஆற்றா விடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே
வீற்றா ரொற்றி நகரமர்ந்தீர் விளங்கு மலரே விளம்புநெடு மாற்றா ரென்றே னிலைகாணெம் மாலை முடிமேற் பாரென்றார் சாற்றாச் சலமே யீதென்றேன் சடையின் முடிமே லன்றென்றே யேற்றா தரவான் மொழிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ