வீற்றார்நின் றன்மணத் தம்மியின் மேல்சிறு மெல்லனிச்சம் ஆற்றாநின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத் தாரெனின்மால் ஏற்றார் திருவொற்றி யூரார் களக்கறுப் பேற்றவரே மாற்றா இயல்கொண் மயிலே வடிவுடை மாணிக்கமே