வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன் விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம் எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி என்மொழி சத்தியம் என்னோடும் கூடி இங்கே களிப்பது நன்றிந்த உலகோ ஏதக் குழியில் இழுக்கும் அதனால் அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து ஆடேடி