வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும் வினைத்துயர்கள் பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான் நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ